கடவுளுக்கு அல்லது கோயிலுக்கு என ஒதுக்கி, பிரத்தியேகமாக விட்டு விட்ட(வளர்க்கப்படும் அல்லது கோயிலுக்கு வழங்கும்) ஆடு, கிடா அல்லது விலங்குகளை "நேந்து விட்டது" என்று கூறுவர். அது போல ஊர் மெய்வதற்கு என்றில்லாமல் மனசுக்கு பிடித்தவர்கள், காதலன், புருஷன் மட்டும் அனுபவிக்க தன் கன்னித்தன்மையை கட்டிக் காப்பாற்றும் ஆண்களும், தன் இஷ்டப்படி கண்டவனுடனும் படுத்து, கண்டாரவொழியாக அலையும் தன்னினச்சேர்க்கையினர்கள் மத்தியில் உள்ளனர்.
அந்த தங்கங்களை தேடிப் பிடிப்பது கடினமாகும். அதற்குக் காரணம், அவர்கள் செக்ஸ் செய்ய Cruising செய்ய மாட்டார்கள்.
இவர்கள் ஒருவனுக்கு ஒருவன்(One to One) என்று ஆசைப்பட்டு, ஏங்கி வாழ்பவர்கள். இவ்வாறானவர்களை உங்கள் இஷ்டப்படி அனுபவிக்க நாடகக் காதலை கையில் எடுப்பது மிகவும் பாவமான செயலாகும்.
இவர்கள் இலகுவில் தன் துணைக்கு துரோகம் செய்ய மாட்டார்கள். எப்பேர்ப்பட்ட உலக அழகனாக இருந்தாலும், தனக்கென்று ஒரு துணை இருக்கும் போது அவனுக்காக வேட்டியை அவிழ்க்க மாட்டார்கள், அதாவது கண்டவனுக்கும் முந்தாணை விரிக்க மாட்டார்கள்.

















