எல்லா ஆண்களாலும் உடம்பில் ஒரு பிட்டு துணி கூட இல்லாமல் நிர்வாணமாக, நிம்மதியாக தூங்க முடியாது. அதற்கு அவர்களின் ஆழ் மனதில் உள்ள பயம் கூட காரணமாக அமையலாம். அதன் காரணமாக, மூடிய அறையாக இருந்தாலும் அநேகமான ஆண்கள் குறைந்தது ஜட்டி மட்டுமாவது அணிந்தே தூங்குவர்.
அதையும் மீறி அம்மணமாக ஆண்கள் தூங்க விரும்பினால், அதற்கு பழக்கப்பட சில காலம் தேவைப்படும். எடுத்தவுடனே அவுத்துப் போட்டு அம்மணமாக கட்டிலில் கிடந்தால், நிச்சயமாக தூக்கம் வராது.
இது வரை காலமும் ஆடை அணிந்து தூங்கியவர்கள், முதலில் உள்ளாடை மட்டும் அணிந்து தூங்க வேண்டும், சில காலம் சென்ற பின்னர் உள்ளாடையையும் கழட்டி விட்டு தூங்க ஆரம்பிக்கலாம். அப்போது அந்த பயம் ஆழ்மனதில் இருக்காது.
பின் குறிப்பு: அம்மணமாக தூங்கும் ஆண்கள், அருகில் சீக்கிரம் அணியக் கூடிய வகையிலான மாற்று ஆடையையும் வைத்துக் கொண்டு தூங்குவது சிறந்தது. அதன் மூலம் இயற்கை அனர்த்தங்கள், மருத்துவ அவசர நிலை பாதுகாப்பு பிரச்சனை, தீ விபத்துகளின் போது அம்மணமாக வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்படாது.








