வெள்ளை நிறம் என்பது சுத்தத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஒரு ஆண் தினமும் குளிக்காமல், தன் உடலை சுத்தமாக வைத்திருக்க அக்கறையில்லாதவனாக இருந்தால், அவன் நிச்சயம் வெள்ளை நிற உள்ளாடைகளை அணியமாட்டான்.
அதற்குக் காரணம், வெள்ளை நிற ஜட்டி, பனியனை அணிந்திருக்கும் போது வியர்த்தால், உடலில் உள்ள அழுக்கு அவற்றில் ஒட்டிவிடும். உடல் கழிவுகளை வெளியேற்றும் போது ஒழுங்காக சுத்தம் செய்யாவிட்டால், அவையும் வெள்ளை நிற ஜட்டியில் கறையை ஏற்படுத்தும். அதிக சிரத்தை எடுத்து அவற்றை சுத்தம் செய்ய வேண்டி ஏற்படும். தினமும் வெள்ளை நிற ஜட்டி, பனியனை துவைத்து அழுக்கை அகற்றா விட்டால், அவற்றில் கறைகள் நிரந்தரமாகப் படிந்து விடும்.
கறை படிந்த, வெள்ளை நிற உள்ளாடைகளை அணிவதையும், துவைத்து கொடியில் காய விடுவதையும் ஆண்கள் அசிங்கமாக, தம்மை மற்றவர்கள் வெறுப்பதற்கான காரணமாக பார்க்கிறார்கள். அதன் காரணமாகவே அநேகமான ஆண்கள் வெள்ளை நிற உள்ளாடைகளை தெரிவு செய்வதில்லை.
ஆனால் ஒரு ஆண் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புபவகள் அவனை வெள்ளை நிற ஜட்டி, பனியனை அணிய ஊக்கப்படுத்த வேண்டும். உடல் சுத்தமாக இருந்தால், வெள்ளை நிற உள்ளாடைகளில் அவ்வளவு சீக்கிரம் அழுக்கு படியாது. சந்தையில் விற்கும் விலைகுறைந்த ஜட்டி, பனியன்களில் வெள்ளை நிறத்தை தெரிவு செய்வதை விட, Premium Quality(விலை உயர்ந்த, Branded) யில் விற்பனையாகும் வெள்ளை நிற ஜட்டி, பனியன்களை தெரிவு செய்து வாங்குவதன் மூலம் அதிக காலம் அவற்றை பயன்படுத்தக் கூடியதாக இருக்கும். அன்றன்று அணிந்த ஜட்டி, பனியன்களை ஆண்களே அன்றிரவே துவைத்துப் போடுவதன் மூலம் கறைகள் நிரந்தரமாவதை தவிர்க்கலாம். சுத்தம் சுகம் தரும். அதே நேரம் ஆரோக்கியத்தையும் மேப்படுத்தும்.